சுதந்திரம் ஒரு கேள்வியே!

Author : AK Suganya Dinesh

சுதந்திரம்!
இந்த பாரதத்தில் நாம் வாழும் வாழ்க்கைக்கு மட்டுமல்ல!
சொல்லும் சொல்லுக்கும்,
செய்யும் செயலுக்கும்;
அநீதிக்கு எதிரான கருத்திற்கும்,
படிப்பிற்கும் பண்பிற்கும்
உரியது.
ஆனால், இச்சுதந்திரம் அவற்றிக்குச் சரியாகப் பயன்படுகிறதா என்றால் சற்றே தயக்கம் தான்!
அன்று நம் முன்னோர்கள் பெற்று தந்த
படிப்புரிமை இன்று,
சட்டத்தின் ஓட்டைகளை கண்டறிந்து
பெண்களை சூறையாடுவதற்கும்,
கருத்து சுதந்திரம் என்ற பெயரில், செய்யும் பிழைகளையெல்லாம் செய்துவிட்டு சமூகத்தின் மேல் பழி போடவும்,
பண்பு என்ற பெயரில், பலர் நம் நாட்டின் பண்பையே மறந்து, பெற்ற தாயை வீதியிலும், வீதியில் உள்ள ஜீவராசிகளை வீட்டிற்குள்ளும் வாழ வழி செய்வதற்கும்,
தனிமனித சந்தோஷம் என்ற பெயரில் சிலர், கட்டிய மனைவிக்கும், பெற்ற பிள்ளைக்கும், வித்தியாசம் பாராமல் இருப்பதற்கும் பயன்பட்டு விட்டதோ என்று அச்சம் எழுகிறது.
இந்த கோரச் சம்பவங்கள் அனைத்தும் செய்தியாய் என் செவிகளில் விழுகையில் என் தாய் திருநாடு வெள்ளையனிடம் பெற்ற சுதந்திரம் இன்று சுயநலவாதிகளிடம் முடங்கிவிட்டதோ? என்ற மிகப்பெரிய கேள்வி பதில் தெரியாமல் தவிக்கிறது குழப்பத்தில்!

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

-சுகன்யா அ க

Advertisement

மீளமுடியாமல்…

நெருப்பை ஜோதி என்று நினைத்து அள்ளிக் கொண்டேன், நான் காகிதக் கப்பல் என்பதையும் மறந்து!
இறுதியில் கருகியது நான் மட்டுமல்ல, என்னைப் படைத்தவனின் கற்பனையும் தான்!

                                                    – சுகன்யா அ.க.

பணம் என்னும் நெருப்பு!

Author: AK Suganya Dinesh

பணமே!

உன்னால் எத்தனை சூழ்ச்சிகள்! எத்தனை வீழ்ச்சிகள்! நீ விழுங்கிய உடல்கள் எத்தனையோ?

நீ ஏழையின்  பகையாய் இருப்பதால் அவன் வறுமை  என்னும்  நெருப்பில் வேகிறான்;

நீ செல்வந்தனின்  நண்பனாய் இருப்பதால் அவன்  ஆணவம் என்னும்  தீயில் எரிகிறான்.

நீ மருத்துவரின் கையில்  இருப்பதால் அவன் புதுப்புது நோய்களை தருகிறான்;

நீ சாமானியனின் கையில் இருப்பதால் அவன் ஆசை என்னும் தீயில் எறிகிறான்.

நீ வாலிபனின் கையில் இருப்பதால் அவன் உழைப்பு என்னும் மந்திரத்தை மறக்கிறான்;

நீ கிழவனின் கையில் இருப்பதால் அவன் மது என்னும் விஷத்தை குடிக்கிறான்.

நீ பெற்றவளின் கையில் இருப்பதால் அவள் புவியில் பிள்ளைக்கு சொர்க்கத்தை காட்டுகிறாள்;

நீ பிள்ளையின் கையில்  இருப்பதால் அவன் இல்லத்தில் அன்னைக்கு நரகத்தை காட்டுகிறான்.

பணமே! இன்னும் எத்தனை மாயங்கள் தான் உன் கைகளிலே…

சித்தர்கள் பலர் செவியறைந்த போதும் இத்தனை மாயங்கள்  நிறைந்த இந்த நெருப்பில் வீழ இன்னும் எத்தனை மயக்கங்கள் தான் என் கண்களிலே!!!

 

காகம் எனும் கரு மயில்!

Author: Suganya Kannan

விண்ணில் பறந்தாலும் வீட்டுப் பறவை!
அதிகாலையில் கரைந்தால் முன்னோர்கள்;
அந்திமாலையில் கரைந்தாலோ எழவு வீடு.
கோவிலில் கண்டால் ஜனம் வணங்கும் சனிபகவான்;
சுடுகாட்டில் கண்டாலோ அபசகுனம்.

காக்கையே!

இவ்வாறு இந்தப் பூவுலகில் சமையத்திற்கேற்றவாறு போற்றுவோரும் தூற்றுவோரும் இருந்தாலும் நீ உன் நிலையில் மாறாமல் என்றும் வாழ்வதாலோ என்னவோ என் மனதைக் கவர்ந்த கரு மயில் ஆனாய்!

– அ.க.சுகன்யா

For poem & story updates, do follow
mightypenarticles in Instagram.
Facebook Page : Mighty Pen -Articles- (https://m.facebook.com/OruKathaSollataaSir/)
Thanks to Akshaya for the Picture!
penningwithpep.wordpress.com
For more pictures, do follow nikon_knack in Instagram.

தூரம்!

Author: Preethika Balasubramani

நிலவின் வெளிச்சம் வானத்தில் படர்கையில், உன் நெற்றியின் வியர்வை முகத்தில் படர்வதாய் தோன்றும்…

 காற்றின் குளிர் என் தேகத்தை வருடும்போது,
உன் சட்டையின் நுனி என்னை தீண்டுவதாய் தோன்றும்…
இரவில் தனியில் தனிமையின்  உணர்வில் உலாவும்போது,
என் நிழல் தரும் பிம்பத்தில் உன் உருவமே தோன்றும்…
மழை வரும்முன் மேகத்தின் பளீர் கீரல்களால்,
உன் கேளிக்கையான புன்னகையே தோன்றும்…
சில பொழுதுகளின் வெற்றிடங்களை நிரப்பமுடியாத நீர்குமிழ்களாய் நம் பிரிவுகளின் ஆழமே தோன்றும்…
மழலையை கொஞ்சும் தாயை பார்க்கும்போது,
நம் பிரிவால் உண்டான வலியே தோன்றும்…
ஏற்பட்ட எல்லாவற்றையும் சரிக்கட்ட உன்னை அழைக்க நினைக்கும்போது ஏனோ நானேன் முதலில் என்ற கர்வமே தோன்றுதடா!!!
Hope you all like this poem. Hit the star & feel free to comment below.
For more poem & story updates, do follow
mightypenarticles in Instagram.
Facebook Page: Mighty Pen -Articles-(https://m.facebook.com/OruKathaSollataaSir/)