Author : Suganya Kannan
மழைத்துளி!
நீ சொட்டு சொட்டாய் விண்ணிலிருந்து என் கன்னத்தில் பட்டதும் உன் ஸ்பரிசத்தில் லயித்துப்போய் உன்னில் காதல்கொண்டேன்.
மின்சாரக்கம்பிகளில் உன் துளிகளின் வடிவம் ஒன்றை ஒன்று மோதி கீழே விழுகையில் புல்வெளியெல்லாம் உயிருற்றது.
பேருந்துகளின் சன்னல் கம்பிகளில் நீ பட்டு பட்டு படர்வதைக் கண்டு,
சின்ன சின்ன குழந்தைகள் உன்னோடு சேர்ந்து ஆடும் ஆட்டத்தைக் கண்டு,
வாடிப்போன செடி ஒன்று மெல்ல துளிர் விடுவதைக் கண்டு,
பயிர்களை கண்டு வாடிய விவசாயின் புன்முறுவலைக் கண்டு,
ரோட்டோரக் கடைக்காரன் குடைக்குள் ஒதுங்குவதைக் கண்டு,
சாலையோரத்தில் ஏழை, பணக்காரன் என்று பாராமல் மக்கள் ஒருமிதத்து நிற்பதைக் கண்டு,
இடிகளின் ஓசையில் சின்னஞ் சிறுகுழந்தை அன்னையின் சேலைக்குள் ஒளிவது கண்டு,
ஒரு வினாடியில் நீ செய்யும் அத்தனை அற்புதங்களையும் கண்டு மெய்சிலிர்க்க வியந்து போனேன் இயற்கையின் எழிலில் திகைத்தவளாய்!
ஆனால், இத்தனையும் இருந்தும்
மழைக்காலத்தில் வரும் பெருமழையை விட இந்த கோடைக்கால மழை மீது தான் எனக்கோ ஏன் இந்த காதல்?