Author, Suganya Kannan, Tamil, Tamil Poem

காகம் எனும் கரு மயில்!

Author: Suganya Kannan விண்ணில் பறந்தாலும் வீட்டுப் பறவை! அதிகாலையில் கரைந்தால் முன்னோர்கள்; அந்திமாலையில் கரைந்தாலோ எழவு வீடு. கோவிலில் கண்டால் ஜனம் வணங்கும் சனிபகவான்; சுடுகாட்டில் கண்டாலோ அபசகுனம். காக்கையே! இவ்வாறு இந்தப் பூவுலகில் சமையத்திற்கேற்றவாறு போற்றுவோரும் தூற்றுவோரும் இருந்தாலும் நீ உன் நிலையில் மாறாமல் என்றும் வாழ்வதாலோ என்னவோ என் மனதைக் கவர்ந்த கரு மயில் ஆனாய்! - அ.க.சுகன்யா For poem & story updates, do follow mightypenarticles in Instagram. (https://www.instagram.com/mightypenarticles)… Continue reading காகம் எனும் கரு மயில்!

Advertisements
Author, Preethika Balasubramani, Tamil Poem

தூரம்!

Author: Preethika Balasubramani நிலவின் வெளிச்சம் வானத்தில் படர்கையில், உன் நெற்றியின் வியர்வை முகத்தில் படர்வதாய் தோன்றும்...  காற்றின் குளிர் என் தேகத்தை வருடும்போது, உன் சட்டையின் நுனி என்னை தீண்டுவதாய் தோன்றும்... இரவில் தனியில் தனிமையின்  உணர்வில் உலாவும்போது, என் நிழல் தரும் பிம்பத்தில் உன் உருவமே தோன்றும்... மழை வரும்முன் மேகத்தின் பளீர் கீரல்களால், உன் கேளிக்கையான புன்னகையே தோன்றும்... சில பொழுதுகளின் வெற்றிடங்களை நிரப்பமுடியாத நீர்குமிழ்களாய் நம் பிரிவுகளின் ஆழமே தோன்றும்... மழலையை கொஞ்சும்… Continue reading தூரம்!

Author, Short story, Suganya Kannan, Tamil

ரசனை!

Author : Suganya Kannan அன்று மாலைப் பொழுது! சூரியன் தன் ஒளிக்கதிர்களை மெல்ல சுருக்கத் தொடங்கினான். செவ்வானம் எங்கும் படர்ந்திருக்க நானோ மாடியில் நின்றுக் கொண்டிருந்தேன். சில்லென்ற ஒரு தென்றல் காற்று மெல்ல படர்ந்தது அவள் கன்னத்தில்! தென்றலின் தீண்டளை அறிந்தவள் மெல்ல இயற்கையை ரசித்தாள், தனது நீண்ட கூந்தலை கோதியவாறு! சட்டென ஒரு ஓசை என் செவிகளில்! அவள் அன்னையின் அழைப்பிற்கு செவி சாய்த்தவளாய் "இதோ வரேன் மா!" என்றாள். போன வேகத்தில் திரும்ப வந்து, போன என் இதய துடிப்பை… Continue reading ரசனை!

Author, Suganya Kannan

கோடை மழை!

  மழைத்துளி! நீ சொட்டு சொட்டாய் விண்ணிலிருந்து என் கன்னத்தில் பட்டதும் உன் ஸ்பரிசத்தில் லயித்துப்போய் உன்னில் காதல்கொண்டேன். மின்சாரக்கம்பிகளில் உன் துளிகளின் வடிவம் ஒன்றை ஒன்று மோதி கீழே விழுகையில் புல்வெளியெல்லாம் உயிருற்றது. பேருந்துகளின் சன்னல் கம்பிகளில் நீ பட்டு பட்டு படர்வதைக் கண்டு, சின்ன சின்ன குழந்தைகள் உன்னோடு சேர்ந்து ஆடும் ஆட்டத்தைக் கண்டு, வாடிப்போன செடி ஒன்று மெல்ல துளிர் விடுவதைக் கண்டு, பயிர்களை கண்டு வாடிய விவசாயின் புன்முறுவலைக் கண்டு, ரோட்டோரக்… Continue reading கோடை மழை!

Author, Preethika Balasubramani

எனக்கா சுதந்திரம் ?

Author: Preethika Balasubramani எனக்கா சுதந்திரம் ? அன்று வயிற்றிலேயே சிதைக்கப்பட்டவள் இன்று வெளியில் சிதைக்கப்படுகிரேனே எனக்கா    சுதந்திரம்? வயதிற்கு வருமுன் வல்லுறவு கொல்லத்துடிக்கும் மதம்கொண்ட மனிதனே எனக்கா சுதந்திரம் ?பாவாடை போடும்முன்னே படுக்கையில் போடும் மிருகங்களே! எனக்கா சுதந்திரம் ? புத்தாடை அணிந்து அதுகசங்காமல் நடக்கும் என்னை குப்பை போல் கசக்கத்துடிக்கும் அரக்கர்களே எனக்கா சுதந்திரம் ? போதும் மனிதர்களே இது தெரிந்திருந்தால் நான் கருவிலேயே பொசுங்கியிருப்பேன் !!தப்பித்து வெளிவந்தேன் என்று மார்தட்டினேன் தட்டிய மறுநொடி… Continue reading எனக்கா சுதந்திரம் ?

Author, Suganya Kannan

தனி மனிதனின் ஓலம்!

Author : Suganya Kannan கணவனும் மனைவியும் தங்களின் காதலின் வெளிப்பாடாய் கலவியும் கொண்டு ஒரு பூச்சியும் உருவானது அவள் வயிற்றினிலே! பெண் குழந்தைப் பிறந்ததை மார்தட்டிக்கொண்டு "என் அம்மாளு" என்று தகப்பன் பெருமிதம் கொள்கிறான்! ஒரு வயதில் நடைவண்டி, மூன்று வயதில் பள்ளிகூடப்பாடம், என்று ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செய்து மெச்சிப்போனான். வருடங்கள் ஓட, ஒரு நாள் அவளது அன்னையோ கண்ணீருடன் "நம்ம பொண்ணு பெரியவளாகிட்டாங்க!" என்று கணவனிடம் கூறுகையில், கண்களில் ஆனந்தத்தையும் நெஞ்சில் பயத்தையும்… Continue reading தனி மனிதனின் ஓலம்!