நெருப்பை ஜோதி என்று நினைத்து அள்ளிக் கொண்டேன், நான் காகிதக் கப்பல் என்பதையும் மறந்து!
இறுதியில் கருகியது நான் மட்டுமல்ல, என்னைப் படைத்தவனின் கற்பனையும் தான்!
– சுகன்யா அ.க.

நெருப்பை ஜோதி என்று நினைத்து அள்ளிக் கொண்டேன், நான் காகிதக் கப்பல் என்பதையும் மறந்து!
இறுதியில் கருகியது நான் மட்டுமல்ல, என்னைப் படைத்தவனின் கற்பனையும் தான்!
– சுகன்யா அ.க.
Author : Suganya Kannan
கணவனும் மனைவியும் தங்களின் காதலின் வெளிப்பாடாய் கலவியும் கொண்டு ஒரு பூச்சியும் உருவானது அவள் வயிற்றினிலே!
பெண் குழந்தைப் பிறந்ததை மார்தட்டிக்கொண்டு “என் அம்மாளு” என்று தகப்பன் பெருமிதம் கொள்கிறான்!
ஒரு வயதில் நடைவண்டி,
மூன்று வயதில் பள்ளிகூடப்பாடம்,
என்று ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செய்து மெச்சிப்போனான்.
வருடங்கள் ஓட,
ஒரு நாள் அவளது அன்னையோ கண்ணீருடன் “நம்ம பொண்ணு பெரியவளாகிட்டாங்க!” என்று கணவனிடம் கூறுகையில்,
கண்களில் ஆனந்தத்தையும் நெஞ்சில் பயத்தையும் சுமந்தவனாய் தன் மகளின் நெற்றியில் முத்தமிடுகிறான்.
ஆசையாய்ப் பெற்ற மகளை நன்கு படிக்கவேண்டும்,பெரிய பதவியில் யாருக்கும் அடிமை இல்லாமல் வாழவேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தவன்,
நாளிதழில் தினம் ஒரு செய்தியாய் வந்துச் செல்லும் பெண்களுக்கு நடக்கும் கொடூரத்தைப் பார்த்ததும்,
“அம்மா நீ படித்தது போதும், உனக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளேன், திருமணம் செய்துகொள்” என்று கூறுகிறான் சற்றே தயக்கத்துடன்!
சிறுவயதில் இருந்து பற்பல ஆசை, லட்சியம் என்று அப்பா உரைத்த சொல்லுக்கு அப்படியே கட்டுப்பட்ட மகளோ இன்று பகுத்தறிந்தவளாய் ஏன் என வினவுகிறாள்?
அதற்குத் தகப்பனிடம் பதில் ஒன்றும் பெரிதாய் இல்லை.
இறுதியில் ஒரு மகவைப் பெற்று அவளை அலங்கரித்து படிக்கவைத்து, அதிகாரம் செய்யும் தோரணையைப் பார்க்க எண்ணிய தகப்பனோ,
சமையல் அறையில் கணவனுக்கு சமைத்து விட்டு, “அவருக்கு இன்னைக்கு சமையல் பிடிக்குமோ பிடிக்காதோ?” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்த தன் தவப்புதல்வியைக் கண்டு தொண்டையில் முள் சிக்கியவனாய், எச்சிலை விழுங்கியபடி மகளின் வீட்டை விட்டு நகர்ந்தான்.
பெண் விடுதலை, பெண் உரிமை, ஆணும் பெண்ணும் சமம் என்றெல்லாம் எத்தனை முறை கூச்சலிட்டாலும்
“தமிழா! உன் சமுதாயம் மரபு என்ற பெயரில் செய்யும் அநீதி அழிவில்லாமல் தொடர்கிறது சில கயவர்கள் செய்யும் வன்கொடுமைகளால்!”
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
– இப்படிக்கு ஒன்றும் செய்யமுடியாதவளாய் சுகன்யா.அ.க.