Author: AK Suganya Dinesh
பணமே!
உன்னால் எத்தனை சூழ்ச்சிகள்! எத்தனை வீழ்ச்சிகள்! நீ விழுங்கிய உடல்கள் எத்தனையோ?
நீ ஏழையின் பகையாய் இருப்பதால் அவன் வறுமை என்னும் நெருப்பில் வேகிறான்;
நீ செல்வந்தனின் நண்பனாய் இருப்பதால் அவன் ஆணவம் என்னும் தீயில் எரிகிறான்.
நீ மருத்துவரின் கையில் இருப்பதால் அவன் புதுப்புது நோய்களை தருகிறான்;
நீ சாமானியனின் கையில் இருப்பதால் அவன் ஆசை என்னும் தீயில் எறிகிறான்.
நீ வாலிபனின் கையில் இருப்பதால் அவன் உழைப்பு என்னும் மந்திரத்தை மறக்கிறான்;
நீ கிழவனின் கையில் இருப்பதால் அவன் மது என்னும் விஷத்தை குடிக்கிறான்.
நீ பெற்றவளின் கையில் இருப்பதால் அவள் புவியில் பிள்ளைக்கு சொர்க்கத்தை காட்டுகிறாள்;
நீ பிள்ளையின் கையில் இருப்பதால் அவன் இல்லத்தில் அன்னைக்கு நரகத்தை காட்டுகிறான்.
பணமே! இன்னும் எத்தனை மாயங்கள் தான் உன் கைகளிலே…
சித்தர்கள் பலர் செவியறைந்த போதும் இத்தனை மாயங்கள் நிறைந்த இந்த நெருப்பில் வீழ இன்னும் எத்தனை மயக்கங்கள் தான் என் கண்களிலே!!!