Author: Preethika Balasubramani
நிலவின் வெளிச்சம் வானத்தில் படர்கையில், உன் நெற்றியின் வியர்வை முகத்தில் படர்வதாய் தோன்றும்…
காற்றின் குளிர் என் தேகத்தை வருடும்போது,
உன் சட்டையின் நுனி என்னை தீண்டுவதாய் தோன்றும்…
இரவில் தனியில் தனிமையின் உணர்வில் உலாவும்போது,
என் நிழல் தரும் பிம்பத்தில் உன் உருவமே தோன்றும்…
மழை வரும்முன் மேகத்தின் பளீர் கீரல்களால்,
உன் கேளிக்கையான புன்னகையே தோன்றும்…
சில பொழுதுகளின் வெற்றிடங்களை நிரப்பமுடியாத நீர்குமிழ்களாய் நம் பிரிவுகளின் ஆழமே தோன்றும்…
மழலையை கொஞ்சும் தாயை பார்க்கும்போது,
நம் பிரிவால் உண்டான வலியே தோன்றும்…
ஏற்பட்ட எல்லாவற்றையும் சரிக்கட்ட உன்னை அழைக்க நினைக்கும்போது ஏனோ நானேன் முதலில் என்ற கர்வமே தோன்றுதடா!!!
Hope you all like this poem. Hit the star & feel free to comment below.
For more poem & story updates, do follow
mightypenarticles in Instagram.
Facebook Page: Mighty Pen -Articles-(https://m.facebook.com/OruKathaSollataaSir/)
அருமை ப்ரீத்திகா…..you penned in such a way that the reader floats in imagination 😍😍😍😍
LikeLike