
Author : Suganya Kannan
அன்று மாலைப் பொழுது!
சூரியன் தன் ஒளிக்கதிர்களை மெல்ல சுருக்கத் தொடங்கினான்.
செவ்வானம் எங்கும் படர்ந்திருக்க நானோ மாடியில் நின்றுக் கொண்டிருந்தேன்.
சில்லென்ற ஒரு தென்றல் காற்று மெல்ல படர்ந்தது அவள் கன்னத்தில்!
தென்றலின் தீண்டளை அறிந்தவள் மெல்ல இயற்கையை ரசித்தாள், தனது நீண்ட கூந்தலை கோதியவாறு!
சட்டென ஒரு ஓசை என் செவிகளில்!
அவள் அன்னையின் அழைப்பிற்கு செவி சாய்த்தவளாய் “இதோ வரேன் மா!” என்றாள்.
போன வேகத்தில் திரும்ப வந்து,
போன என் இதய துடிப்பை ஒரு கணம் மீட்டெடுத்தாள்!
அவளது கைகளில் ஒரு தேநீர் கோப்பை!
தேநீரைப் பருகும் பொழுது அவளது இதழ்கள் ஈரமானதை கண்டும் காணாதவன் போல் நான்!
சட்டென திரும்பி என்னை நோக்கினாள்.
மொட்டை மாடியில் இயற்கையை ரசிக்க வந்தவன் போல் நான் நடிக்க,
என்னை முறைப்பது போல் அவளும் நடித்தாள்.
ஆனால் நான் ரசித்தது என் எதிர் வீட்டு விமலாவையோ, கமலாவையோ அல்ல.
என் வீட்டு எஜமானி என் ப்ரியாவை தான்.
ஆம்! என் மனைவியை அவளுக்கே தெரியாமல் இரண்டு வருடம் ரசித்து தான் இன்று திருமணமும் செய்து கொண்டேன்.
ஆனால், அவள் அருகில் அந்த காதல்
மட்டும் மாறாதவனாய் என்றும் நான்!
Hope you all like the poem. Hit the star & Feel free to comment below if you like it.
For poem & story updates, do follow
mightypenarticles in Instagram.
Facebook Page : Mighty Pen -Articles- (https://m.facebook.com/OruKathaSollataaSir/)
Thanks to Akshaya for the Picture! For more pictures, do follow akshaya_photography in Instagram.
Haha.Thanks dude!A good one thou!
LikeLike
Ha ha… Thank you Ma. Keep supporting!
LikeLike